×

ஜெயங்கொண்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்

ஜெயங்கொண்டம், மே 20: ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலை அருகே ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ள கட்டிடங்களை நகராட்சி நிர்வாகத்தினர் இடித்து அகற்றினர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து பகுதிகளிலும் நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள அவகாசம் கொடுத்து நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

ஆக்கிரமிப்பு செய்தவர்களில் சிலர் தாமாகவே முன்வந்து பொருட்களை அப்புறப்படுத்தி வந்தனர். ஜெயங்கொண்டம் நகராட்சி கும்பகோணம் சாலையில் பழுப்பேரி என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இரவு நேரமானதால் மீண்டும் இன்று காலை பணி துவங்கும் முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Jayangonda ,
× RELATED அமைச்சர் சிவசங்கர் காரில் பறக்கும்படை சோதனை