பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தக்கோரி அமைச்சு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகை, மே 20: தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் சார்பில் நாகை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு வாயிற்கூட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் சீனிவாச ராவ் தலைமை வகித்தார். மகளிரணி அமைப்பாளர் அங்காள பரமேஸ்வரி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல், மாவட்ட துணை தலைவர் மேகநாதன், வட்டத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.

வேளாண்மை துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வட்டார அளவிலான வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர் பதவி இடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர். மாவட்ட துணை தலைவர் மீனாட்சிசுந்தரி நன்றி கூறினார்.

Related Stories: