×

சிபிஐ அதிகாரிகளின் தொடர் ஆய்வால் பட்டாசு ஆலைகளை மூடிய உரிமையாளர்கள்

சிவகாசி, மே 20: சிவகாசி பகுதியில் 1200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் சரவெடி மற்றும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், ஆலைகளில் 20 சதவீத பட்டாசு மட்டுமே தற்போது தயாரிக்கின்றனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தடை ெசய்யப்பட்ட பட்டாசு தயாரிப்பதை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், டெல்லியில் இருந்து 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் சிவகாசி தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இவர்கள், நேற்று முன்தினம் அக்கரைப்பட்டி, வெற்றிலையூரணி கிராம பட்டாசு ஆலையில் ஆய்வு நடத்தினர். அப்போது மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உடனிருந்தார்.

ஆய்வின்போது சிபிஐ அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் ஒவ்வொரு அறையாகச் சென்று, அங்கு தயாரிக்கப்படும் பட்டாசு, அதற்கு பயன்படுத்தும் கெமிக்கல் ஆகியவை குறித்து சோதனை நடத்தினர். இதேபோல் வெம்பக்கோட்டை, நாரணாபுரம், மேட்டமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேற்று ஆய்வு நடத்தினர். ஒவ்வொரு ஆலையிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது. பின்னர் பட்டாசு, கெமிக்கல் மாதிரிகளை எடுத்துச் சென்றனர். சிபிஐ அதிகாரிகள் சிவகாசி பட்டாசு அலையில் தொடர் சோதனை நடத்தி வரும் தகவல் அறிந்த உரிமையாளர்கள் பலர் ஆலைக்கு ேநற்று விடுமுறை விட்டனர்.

Tags : CPI ,
× RELATED டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான...