×

தேனி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வை நாளை 21,588 பேர் எழுதுகின்றனர்

தேனி, மே 20: தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-2வில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, 2ஏ தேர்வு நாளை (மே 21) நடக்க உள்ளது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகாவில்-3,799, உத்தமபாளையம் தாலுகாவில்-6,179, தேனி தாலுகாவில் 16,610 என 21,588 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக தேனி தாலுகாவில்-43, பெரியகுளம் தாலுகாவில்-14, உத்தமபாளையம் தாலுகாவில்-25 என மொத்தம் 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வை கண்காணிக்க தேனி தாலுகாவில் 9 இயக்க குழுக்கள், 6 பறக்கும் படை, பெரியகுளம் தாலுகாவில் 4 இயக்க குழுக்கள், 3 பறக்கும் படை, உத்தமபாளையம் தாலுகாவில் 6 இயக்க குழுக்கள், 4 பறக்கும் படைகள் என மொத்தம் 19 இயக்க குழுக்களும், 13 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் 82 வீடியோ கிராபர்கள் தேர்வை பதிவு செய்கின்றனர். தேர்வு பணியில் தேனி தாலுகாவில்-86, பெரியகுளம் தாலுகாவில்-28, உத்தமபாளையம் தாலுகாவில்-50 என 164 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு வினாத்தாள்கள் பெரியகுளம், தேனி, உத்தமபாளையம் ஆகிய தாலுகாக்களில் உள்ள சார்கருவூலங்களுக்கு நேற்று பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. தேர்வு மையங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Theni district ,
× RELATED கோம்பை பகுதியில் வாகன...