×

காரைக்குடி ரயில்வே சாலை ரூ.6 கோடியில் விரிவாக்கம்: நகர்மன்ற தலைவர் தகவல்

காரைக்குடி, மே 20: காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் போக்குவரத்து சீரமைப்புக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. ஆணையர் லட்சுமணன் வரவேற்றார். நகர்மன்ற தலைவர் முத்துத்துரை தலைமை வகித்தார். துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை பேசுகையில், காரைக்குடி நகராட்சி பகுதியின் வளர்ச்சிக்கு என பல்வேறு புதிய திட்டங்கள் தீட்டப்பட உள்ளன.

போக்குவரத்து நெருக்கடியற்ற, விபத்துகள் இல்லாத சிங்கார காரைக்குடியாக மாற்றுவதே இலக்கு. சுற்றுலா நகராக உள்ள இப்பகுதிக்கு பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் வருகின்றனர். எனவே நகரின் அழகினை மேம்படுத்தும் விதமாக ரூ.6 கோடியில் பெரியார் சிலை முதல் ரயில்வே ரோடு வரையிலான 100 அடிரோடு மற்றும் முடியரசனார் சாலைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. இச்சாலையோரங்களில் பாதசாரிகள் நடந்து செல்ல வசதியாக நடைபாதை அமைக்கப்படும். சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு அதில் பூச்செடிகள் மற்றும் விளக்குகள் அமைக்கப்படும்.

சென்னை மவுண்ட் ரோடு போன்று இச்சாலைகள் இருக்கும். விபத்துகளை தவிர்க்கும் வகையில் நகரில் உள்ள அனைத்து சிக்னல்களையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும். நகரின் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் இணைந்து செல்படுவோம். நகரின் வளர்ச்சிக்கு என பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கொண்டு குழு அமைக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் டிஎஸ்பி வினோஜி, நகரமைப்பு அலுவலர் மாலதி, தொழில் வணிகக்கழக தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன், ஏஐடிசி மாநில நிர்வாகி ராமச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், மைக்கேல், சித்திக், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சன்சுப்பையா, பழனி, காரைசுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Karaikudi Railway Road ,City Council Chairman Information ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ