கல்குவாரியில் ஆண்சடலம் மீட்பு அடையாளம் காண முடியாமல் மங்கலம் போலீசார் திணறல்

திருப்பூர்,மே20: திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த இச்சிப்பட்டி, கொத்துமுட்டிபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத கல்குவாரி உள்ளது. இதில் கடந்த 17 ம் தேதி கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், 3 தனிப்படையும் அமைத்துள்ளனர். இந்நிலையில் 3 நாட்களாகியும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டு இறந்தாரா? என்பது குறித்து எந்த தகவலும் போலீசாருக்கு தெரியவில்லை.மேலும், சம்பவ இடத்தை சுற்றியுள்ள நிறுவனங்களில் பணியாற்றும் 10 க்கும் மேற்பட்டோரை அழைத்து போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: