திருப்பூர் பெரியார் காலனியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார மையம் எம்எல்ஏ செல்வராஜ் தொடங்கி வைத்தார்

திருப்பூர், மே 19: திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட பெரியார் காலனியில், மாநகராட்சி சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் எம்எல்ஏக்கள் க.செல்வராஜ் (திருப்பூர் தெற்கு), விஜயகுமார் (திருப்பூர் வடக்கு) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் திமுக தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. மு.நாகராசன், 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி, உதவி கமிஷனர் சுப்பிரமணியம், 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் கொ. ராமதாஸ், மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார்காலனி எம்.எஸ்.மணி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜான்வல்தாரீஸ், வடக்கு மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் சிட்டி வெங்கடாசலம், வர்த்தக அணி அமைப்பாளர் வடுகநாதன், கவுன்சிலர்கள் சகுந்தலா, ராதாகிருஷ்ணன், பிரேமலதா, பத்மாவதி, அனுஷ்யாதேவி உள்பட திமுக வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் திருப்பூர் 26-வது வார்டுக்குட்பட்ட குலாம் காதர் லே-அவுட் மெயின் வீதியில் தெற்கு தொகுதி எம்எல்ஏ நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான நிழற்கூரை அமைக்கும் பணியை எம்எல்ஏ செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

Related Stories: