அரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி

ஈரோடு, மே 19: உலக அருங்காட்சியக தினம் ஆண்டுதோறும் மே 18ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ‘வெளியூர் முதல் உள்ளூர் வரையிலான அருங்காட்சியகங்கள்’ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நேற்று துவங்கப்பட்டது. இக்கண்காட்சியில், உலக நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்கள், இந்தியாவில் உள்ள பெரிய மற்றும் முக்கிய அருங்காட்சியகங்கள், தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்களின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த புகைப்பட கண்காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட்டு செல்லலாம். பள்ளி மாணவ-மாணவர்களுக்கு மட்டும் கட்டணம் இல்லை. கண்காட்சியானது வரும் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது என அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி தெரிவித்துள்ளார்.

Related Stories: