பாண்டவர்மங்கலத்தில் ரூ.20 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கோவில்பட்டி, மே 19: கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்திற்குட்பட்ட பாலாஜி நகர் மற்றும் காமராஜர் நகர் மேற்கு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணியை அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் யூனியன் துணை தலைவர் பழனிசாமி, நகராட்சி கவுன்சிலர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஒன்றிய மகளிரணி இணை செயலாளர் ராமலட்சுமி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள் பாலமுருகன், அங்குசாமி, ஒன்றிய முன்னாள் செயலாளர் போடுசாமி, பேச்சாளர் பெருமாள்சாமி, கிளை செயலாளர் பொன்ராஜ், குத்தகைதாரர் தங்கராஜ், அய்யாத்துரை பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கோபி, முருகன், பழனிகுமார், மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: