இ- ஆப்பீஸ் முறையை சிறப்பாக செயல்படுத்திய நெல்லை மாநகர காவல்துறைக்கு டிஜிபி பாராட்டு சான்று வழங்கல்

நெல்லை, மே19: தமிழக அளவில் நெல்லை மாநகர காவல்துறை இ-ஆப்பீஸ் முறையை சிறப்பாக செயல்படுத்தியதற்காக டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு சான்று வழங்கினார். தமிழக காவல்துறையில் மாநகர காவல் துறையில் இ-ஆப்பீஸ் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழக அளவில் நெல்லை மாநகர காவல்துறையில் இ-ஆப்பீஸ் முறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நெல்லை மாநகர காவல்துறையை ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த காவல் மாநகரமாக தேர்வு செய்து தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளார்.இச்சான்றிதழை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் பெற்றுக்கொண்டார். இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் கிழக்கு சுரேஷ்குமார், (மேற்கு) சுரேஷ்குமார், முதுநிலை அலுவலர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், தொழில் நுட்ப பிரிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: