கம்பத்திலிருந்து கேரளா செல்லும் பஸ்களில் ரேஷன் அரிசியுடன் கஞ்சா கடத்தலா? அரசு அதிகாரிகள் கவனிக்க ேகாரிக்கை

கம்பம், மே 19: கம்பத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்களில் ரேஷன் அரிசியுடன் கஞ்சாவும் சேர்த்து கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக-கேரள எல்லையோரங்களில் வசிக்கும் கூடலூர், லோயர்கேம்ப், கம்பம் ஆகிய ஊர்களிலிருந்து கேரளா மாநிலம் குமுளிக்கும், கம்பத்திலிருந்து கம்பமெட்டும் தெற்கு ,மேற்கு என இரு எல்லைகள் வழியாக கேரளவுக்கு எளிதில் செல்லலாம். இவ்வழியாக கேராளாவுக்கு நாள்தோறும் தமிழக ரேஷன் அரிசி கிலோ 20 முதல் 30 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை குறைந்த விலையில் வாங்க கேரளாவில் எண்ணற்ற ஏஜெண்டுகள் உள்ளனர். குமுளி மற்றும் கம்பமெட்டில் ரேஷன் அரிசியை வாங்கும் கேரள அரிசி ஏஜெண்டுகள், அங்கிருந்து ஜி.எஸ்.டி பில்லுடன் கேரளாவில் உள்ள காலடிக்கு கொண்டு செல்லப்பட்டு ,அங்குள்ள மில்களில் பட்டை தீட்டப்பட்டு அந்த மில்களில் ரீபேக்கிங் செய்யப்பட்டு கேரளா முழுவதும் கடைக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில்லாமல் ரேஷன் அரிசியை நேரடியாக யானைகள் வளர்ப்பு மையங்களில் வாங்கப்படுகிறது.

ரேஷன் அரிசியை யானைகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது. இதனால் மாதம்தோறும் பல ஆயிரக்கணக்கான டன் ரேசன் அரிசி கேரளாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கடத்தி செல்லப்படுகிறது. முன்பு அதிகளவில் லாரி, ஜீப்புகளில் கடத்தி செல்லப்பட்டது தற்சமயம் குறைந்து தலைச்சுமை மற்றும் பஸ் ,டூவீலர்களில் கடத்தி செல்லப்படுகிறது. கம்பம் பஸ் ஸ்டாண்டிலிருந்து குமுளி மற்றும் நெடுங்கண்டம், கட்டப்பனை செல்லும் பேருந்துகளில் கட்டைப்பை மற்றும் குட்டிசாக்குகளில் பலசரக்கு சாமான்கள் போல கொண்டு செல்கின்றனர். அதிலும் ஒரு சிலர் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு ரேஷன் அரிசியுடன் கஞ்சாவும் கடத்தி செல்வதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: