கொளுஞ்சிப்பட்டியில் மீன்பிடி திருவிழா

திருப்புத்தூர், மே 19:கொளுஞ்சிப்பட்டியில் நேற்று நடந்த மீன்பிடித் திருவிழாவில், ஏராளமானவர்கள் பங்கேற்று மீன்களை பிடித்து சென்றனர். திருப்புத்தூர் அருகே கொளுஞ்சிப்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் இருந்த தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது கண்மாயில் நீர் வற்றியதால் நேற்று மீன்பிடித் திருவிழா அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொளுஞ்சிபட்டி, காட்டாம்பூர், கா.பிள்ளையார்பட்டி, வேலினிப்பட்டி, தரியம்பட்டி, அப்பாகுடிப்பட்டி, அரசங்குடிப்பட்டி, திருக்கோஷ்டியூர், தேவரம்பூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் மீன்பிடி பொருட்களை வைத்து மீன்களை பிடித்தனர். இதில் கெண்டை, கெளுத்தி, குறவை, சிலேபி உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன.

Related Stories: