×

குண்டாசில் 2 பேர் கைது

மதுரை, மே 19:மதுரை அருகே நிலையூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் அழகுசேதுபதி(எ)சேது(24), திருநகர், 2வது பஸ் நிறுத்தம், பாண்டியன் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(24). இருவரும் கொலை, வழிப்பறி வழக்குகளில் போலீஸ் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மதுரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் இருவரையும் குண்டாசில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Kuntasil ,
× RELATED தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் குண்டாசில் கைது