×

இளைஞர்கள் குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்று அரசு உயர் பதவிகளில் பணியாற்றுவதை லட்சியமாக கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

மதுரை, மே 19: இந்தியக் குடிமை பணி தேர்வு தொடர்பாக தேர்வர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உனக்குள் ஓர் ஐஏஎஸ் என்ற தலைப்பில் கருத்தரங்கம் மதுரையில் நடந்தது. மதுரை மாவட்ட நிர்வாகமும், தனியார் அமைப்புகளும் சேர்ந்து நடத்திய இக்கருத்தரங்கை துவக்கி வைத்து கலெக்டர் அனீஷ்சேகர் பேசுகையில், இந்திய குடிமைப்பணி என்பது மத்திய, மாநில அரசுகளின் கீழ் உள்ள அரசு பணிகளை மேலாண்மை செய்யும் முக்கிய பணியாகும்.
இளைஞர்கள் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று அரசின் உயர் பதவிகளில் பணியாற்றிட வேண்டும் என லட்சியமாக கொள்ள வேண்டும். இதற்காக தேர்விற்கு கடுமையாக தயாராக வேண்டும் இத்தேர்வானது முதன்மை தேர்வு, ஆளுமை தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக நடத்தப்படும். தேர்வுக்காக வெறுமனே புத்தக அறிவு மட்டுமல்லாமல், நாட்டு நடப்புகள், முக்கிய நிகழ்வுகள் போன்ற பல்வேறு தரவுகளில் தெளிவுடன் இருக்க வேண்டும். அதேபோல, தகவல் பரிமாற்ற திறன், மொழித்திறனையும் வளர்த்து கொள்ள வேண்டும்.

பொதுவாக ஆளுமை தேர்வில் தேர்வர்களின் தனிப்பட்ட ஆளுமை, தலைமை பண்பு, உடல்மொழி, அறநெறி, தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட பண்புகளை கணக்கீடு செய்து சரியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தங்களது விருப்ப பாடத்தில் ஆழ்ந்த ஞானம், நல்ல மொழித்திறனுடன் கடுமையாக உழைத்தால், தேர்வினை எளிதில் வெற்றி பெறலாம்’ என்றார். ெதாடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற இளைஞர்கள் குடிமை பணி தேர்வு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு நிபுணர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட எஸ்பி பாஸ்கரன், யுபிஎஸ்சி முன்னாள் சேர்மன் அகர்வால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,Government ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...