கொடைக்கானல் சாலையில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை

கொடைக்கானல், மே 19: கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் களைகட்டி உள்ளது. இந்த கோடை சீசன் காலத்தில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். இதனால் வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்கின்றன. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த பிரதான சாலையில் மச்சூர், பெருமாள் மலை, கரடி சோலை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பாலம் அமைக்கும் பணிகள் மிக தாமதமாக நடந்து வருகிறது. இந்த பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பணிகளை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் அல்லது இந்த பணிகளை தற்காலிகமாக நிறுத்தி சீசன் காலம் முடிந்தவுடன் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை சீசன் காலங்களில் இதுபோன்ற சாலை பணிகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணிகள்.

Related Stories: