பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: வாலிபர் கைது

சென்னை: சென்னையில் ஒரு வாலிபர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் பிறந்தநாள் கொண்டாடியது சமூகவலைதளத்தில் பரவியது. இதை பார்த்த போலீஸ் உயரதிகாரிகள், அந்த வீடியோ வெளியிட்ட நபர்களை விசாரிக்கும்படி அனைத்து காவல் நிலையத்துக்கும் உத்தரவிட்டனர். இதையடுத்து திருமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீடியோ சென்னை பழைய திருமங்கலம் பகுதியில் இருந்து வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, பழைய திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (23) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: