பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட `ரூட் தல’ பிரச்னையால் கீழ்ப்பாக்கம் போலீசார் பச்சையப்பன் கல்லூரி நுழைவுவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பச்சையப்பன் கல்லூரியின் பின்புறம் உள்ள நுழைவு வாயில் அருகே ஹாரிங்டன் சாலையில் உள்ள மின்கம்பத்தின் கீழ் 2 பை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை போலீசார் பார்த்தனர். அதில் ஒரு பையில் 8 பட்டாக்கத்திகள் மற்றொரு பையில் பீர் பாட்டிகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து மோதல் சம்பவத்திற்கு காரணமான கிஷோர் மற்றும் பிரேம்குமார் ஆகியோரை நேற்று முன்தினம் கைது ெசய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்து பச்சையப்பன் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் பெரம்பூர் பகுதி ரூட் தல மாணவர்களான மாரிமுத்து, தமிழ்செல்வன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 2 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே கிஷோர், பிரேம்குமார், மாரிமுத்து, தமிழ்செல்வன் உட்பட 6 பேரை பச்சையப்பன் கல்லூரி சஸ்பெண்ட் செய்துள்ளது.

Related Stories: