×

கும்மிடிப்பூண்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுபுழல்பேட்டை மற்றும் குருவாட்டுச்சேரி ஆகிய இரு ஊராட்சிகளில் பிர்லா கார்பன் நிறுவனத்தின் மூலம்  தலா ரூ.14.60 லட்சம் மதிப்பு என மொத்தம் ரூ.29 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் சுசிலா மூர்த்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை திறந்து வைத்தார். பின்னர் பிர்லா கார்பன் நிறுவன தலைமை உற்பத்தி அலுவலர் சஞ்சீவ்சூட் வாழ்த்துரை வழங்கினார்.

இதில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பேசுகையில், `கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் இதேபோன்று சமூக பணிகளை செய்து ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு உதவவேண்டும்’ என்றார்.
பின்னர் பிர்லா கார்பன் நிறுவன தலைமை உற்பத்தி அலுவலர் சஞ்சீவ்சூட் வாழ்த்துரை வழங்கினார். இந்த விழாவில் பிர்லா கார்பன் நிறுவனத்தின் பிரிவு தலைவர் ஜிபனானந்தா ஜெனா, அதிகாரிகள் ராஜந்திர விஜய் பத்மாகர் லால் தாஸ், புருனெந்து குமார், ஜெ.ராஜன், இ.பிரகாசம், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், திமுக கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், நகரச்செயலாளர் அறிவழகன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், திமுக நிர்வாகிகள் ரவி, கே.இ.திருமலை, மஸ்தான், ஒன்றிய பிரதிநிதி ராகவரெட்டிமேடு ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Purified Drinking Water ,Gummidipoondi ,DJ Govindarajan ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....