திருவில்லிபுத்தூர் அருகே பெண்ணை கொலை செய்தவர் கைது

திருவில்லிபுத்தூர், மே 18: திருவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் ராஜீவ் காலனியில் லட்சுமணன் மற்றும் காளீஸ்வரி (45) ஆகிய இருவரும் குடி இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காளீஸ்வரி வீட்டுக்குள் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டில் காளீஸ்வரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். போலீசார் விசாரணையில், உடன் வசித்து வந்த லட்சுமணன் மாயமானது தெரியவந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் லட்சுமணனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். மேலும் போலீசார் விசாரணையில் லட்சுமணன், காளீஸ்வரியை கொலை செய்ததும் தெரியவந்தது.

Related Stories: