×

தம்பி மகன் இறப்புக்கு வந்த பெரியப்பா சாவு போடி அருகே சோகம்

போடி, மே 18: போடி அருகே உள்ள நாகலாபுரம் கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் சந்திரன் (36), கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சந்திரன் இறந்ததால், அவரது உறவினர்கள், நண்பர்கள் துக்க நிகழ்வுக்கு வந்தனர். இந்நிலையில், நேற்று சந்திரனின் உடலை மயானத்தில் அடக்கம் செய்துவிட்டு வந்தனர். அப்போது சந்திரனின் பெரியப்பா பழனிச்சாமியின் அண்ணன் முருகன் (56), தம்பி மகன் இறந்த வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவரும் இறந்தார். இரண்டாவது முறையாக மயானத்திற்கு சென்று முருகனின் உடலை அடக்கம் செய்தனர். நாகலபுரம் கிராமம் சோகத்தில் மூழ்கியது.

அரசு வழக்கறிஞர் நியமனம்
தேனி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற அரசு வழக்கறிஞராக, உத்தமபாளையத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் குணசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை, உத்தமபாளையம் பார் அசோசியேசன் மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் வாழ்த்தினர்.

Tags : Periyappa Chavu Bodi ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு