×

விசிக நிர்வாகிக்கு மரியாதை

பெரியகுளம், மே 18: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாநில பொருளாளர் மு.முகமது யூசுப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பெரியகுளத்தில், டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, அக்கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சிக்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில்,ஒன்றியச் செயலாளர் ஆண்டி, நகரச் செயலாளர் ஜோதி முருகன் முன்னிலை வகித்தனர். பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், சட்டமன்ற தொகுதி செயலாளர் தமிழ்பாண்டியன், மாநில துணைச்செயலாளர் சிவனேசன், நகர்மன்ற துணைத் தலைவர் பிரேம்குமார், கவுன்சிலர்கள் பவானிமுருகன், கோமதி, நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

Tags : Vizika ,
× RELATED தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர்...