வைகை ஆற்றில் மணல் குவாரி கைவிட ஆலோசனை கூட்டம்

மானாமதுரை, மே 18: மானாமதுரை அருகே கல்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட வைகை ஆற்றில் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் திட்டங்களுக்கு அருகில் மணல் குவாரி அமைக்க பொதுப்பணித் துறையினர் முடிவு செய்திருந்தனர். இதை கண்டித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மணல் குவாரி அமைப்தை கைவிட வலியுறுத்தி ஆலோசனைக்கூட்டம் நடந்தது. விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அர்ச்சுணன் தலைமை வகித்தார். மானாமதுரை கல்குறிச்சி வைகை ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை கைவிட வலியுறுத்தி மே 20ம் தேதி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது. மே 25ம் தேதி காலவரையற்ற போராட்டம் துவங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: