குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

காரைக்குடி, மே 18: காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேருராட்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் கலெக்டரின் உத்தரவின்படி நடந்தது. பேரூராட்சி தலைவர் ராதிகா தலைமை வகித்தார். செயல்அலுவலர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார். மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடுத்த மூன்று மாதத்திற்கான செயல் திட்டம் தீட்டப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: