×

அவிநாசி அரசு கல்லூரியில் நூலகம் திறப்பு பாரதி கொள்ளு, எள்ளு பேரன்கள் பங்கேற்பு

அவிநாசி,மே 18: பாரதியார் நினைவு நூற்றாண்டுவிழாவை  முன்னிட்டு அவிநாசி அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  தமிழ்த்துறை சார்பில் பாரதி நூலகம் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வர் நளதம் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் மணிவண்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில், பாரதிசெல்லம்மாள் திருவுருவச்சிலை திறப்பு, பாரதி கலை இலக்கிய போட்டிகள், வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாரதி குறும்படம் முன்னோட்டம் வெளியிடு ஆகியன நடைபெற்றது. கவிதை, கட்டுரை, பேச்சு, மாறுவேடப்போட்டி, எழுத்துப்போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 18 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் பங்கேற்ற 75 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  விழாவில், பாரதியாரின் கொள்ளுப்பேரன் இராஜ்குமார்பாரதி, எள்ளுப்பேரன் நிரஞ்சன்பாரதி ஆகியோர் பங்கேற்று பாரதி நூலகத்தை திறந்து வைத்தனர். விழாவில், கல்லூரி மாணவர்கள் சஞ்சய்குமார், மனோஜ் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். தமிழ் விரிவுரையாளர் நந்தினி வரவேற்றார். புனிதராணி நன்றி கூறினார்.

Tags : Avinashi Government College Library ,Bharati Kollu ,
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...