கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த பைக் ரேசில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மதுக்கரை, மே 18: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞரணி நிர்வாகி ஜெகதீஷ்வரன் ஏற்பாட்டில் கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கோவை ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்லூரி மைதானத்தில் பைக் ரேஸ் நடைபெற்றது. திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி துவக்கி வைத்தார். இதில், தமிழகம் மட்டுமின்றி கேரளா ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பைக் வீரர்கள் கலந்து கொண்டனர்.

மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த பைக் ரேசில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு மதுக்கரை ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பிரகாஷ் பரிசு வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, கவுன்சிலர்கள் காதர், ராஜன், பகுதி செயலாளர் மகாலிங்கம் மாணிக்கம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: