கோவில்பட்டி பாரதிநகர் சலவைத்துறையில் புதிய தொட்டி கடம்பூர் ராஜூ எம்எல்ஏ திறந்து வைத்தார்

கோவில்பட்டி, மே 18: கோவில்பட்டி பாரதிநகர் பகுதியில் சலவைத்துறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சலவைத் தொட்டியை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கோவில்பட்டி பாரதிநகர் பசுவந்தனை சாலையில் உள்ள சலவை துறையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பில் புதிதாக சலவை தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சலவைத்துறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டியினை திறந்து வைத்தார். பின்னர் தொட்டியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாயையும் திறந்து  வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச்செயலாளர்கள் அன்புராஜ், கருப்பசாமி, நகர செயலாளர் விஜயபாண்டியன், யூனியன் துணை சேர்மன பழனிச்சாமி, ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஜெ பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அயாத்துரை, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வக்கீல்கள் சங்கர் கணேஷ், ஈஸ்வரமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, கவியரசு, வள்ளியம்மாள், ஜெ. பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட ஜெ.பேரவை இணைச்செயலாளர் நீலகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: