செட்டிக்குளம் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

சாத்தான்குளம்,மே 18: செட்டிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் ரூ.17.32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

 சாத்தான்குளம் அருகே செட்டிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மறுசீரமைப்பு கூடுதல் திட்டத்தின் கீழ் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல்  வகுப்பறைகள் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு யூனியன் சேர்மன் ஜெயபதி தலைமை வகித்தார். ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, செட்டிக்குளம் ஊராட்சித்தலைவர் சிவகாமிசுந்தரி, மாவட்ட ஆவீன் சேர்மன் சுரேஷ்குமார், தாசில்தார் தங்கையா, ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலாகார்மல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் வரவேற்றார்.

 தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைபராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பள்ளிகளின் கூடுதல் வகுப்பறைகள் கட்டடங்களை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் அவர் பேசியதாவது;  ‘தமிழக முதல்வர் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காகவே உழைத்து வருகிறார். எல்லோருடைய கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் பொதுமக்களை நேரில் சந்தித்து வருகிறார். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் ஏழை மக்களுக்கு சென்று சேர்ந்திட அயராது முதல்வர் உழைத்து வருகிறார். வருங்காலங்களில் ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டு வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்’ என்றார்.

 விழாவில் மாநில திமுக மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய திமுக செயலாளர்கள் பாலமுருகன், ஜோசப், நெடுஞ்சாலை நுகர்வோர் பாதுக்காப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் போனிபாஸ், மாநில திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் இந்திரகாசி, பசுபதி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன்,  சாத்தான்குளம் நகர காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜோசப் அலெக்ஸ,  வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பார்த்தசாரதி, லூர்து மணி, சக்திவேல்முருகன், செட்டிகுளம் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஒன்றிய உதவி பொறியாளர் அருணாபிரதாயினி நன்றி கூறினார். முன்னதாக அமைச்சர்  அனிதாராதாகிருஷ்ணனிடம் ஊராட்சித்தலைவர் சிவகாமிசுந்தரி, கணேசன் ஆகியோர்  இப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். செட்டிகுளத்தை  தலைமையாக கொண்டு வருவாய் கிராமம் அமைக்க வேண்டும் என மனு அளித்தனர்.

Related Stories: