3வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் பஸ் நடத்துனர் அதிரடி கைது

காரைக்கால்,  மே 18: காரைக்கால் கோட்டுச்சேரியில் 3 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில்  ஈடுபட்ட தனியார் பஸ் நடத்துனரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரி  மாநிலம், காரைக்கால் பிராந்தியம் கோட்டுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக  பகுதியில் வசிப்பவர் மணிவண்ணன் (37). தனியார் பஸ் நடத்துனரான இவருக்கு  திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இவர் தனக்கு அறிமுகமான  நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்த 3 வயது பெண்  குழந்தையிடம் பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அதிர்ச்சியடைந்த அக்குழந்தையின் தாய், உடனே இதுபற்றி அங்குள்ள  குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் முறையிட்டார். அக்குழுவின்  பரிந்துரையின்பேரில் குழந்தையின் தாயிடம் புகாரை பெற்றுக் கொண்ட  கோட்டுச்சேரி இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன், எஸ்ஐ செந்தில்குமார் தலைமையிலான  போலீசார், தனியார் பஸ் நடத்துனரான மணிவண்ணன் மீது போக்சோ பிரிவில்  வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை நேற்று அதிரடியாக கைது  செய்தனர்.

Related Stories: