குமரியில் பரவலாக பெய்த சாரல் மழை

நாகர்கோவில், மே 14: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  பரவலாக  காற்று வீசியது.இருப்பினும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம்  மாவட்டத்தில் பல பகுதியில் சிறிது நேரம் மழை பெய்தது.நேற்று மாவட்டத்தில் வெயிலின் தாக்கும் குறைந்து காணப்பட்டது. வானம்  மேகமூட்டத்திடன் காணப்பட்டது. அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் குறைந்த அளவு மழை பெய்தது.  இதனால் அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.60 அடியாக உள்ளது. அணைக்கு 140 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.55 அடியாக உள்ளது. அணைக்கு 68 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 16.49 அடியாக உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 18.10 அடியாகவும், சிற்றார் 1 அணை நீர்மட்டம் 9.94 அடியாகவும், சிற்றார் 2 அணை நீர்மட்டம் 10.04 அடியாகவும் உள்ளது. நேற்று முன்தினம் குருந்தன்கோட்டில் அதிக பட்சமாக 8.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

Related Stories: