பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

பண்ருட்டி, மே 14: பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஆய்வு ெசய்தார். அப்போது பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இது தொடர்பாக பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சபா பாலமுருகன் தலைமையில் நடந்தது. பிடிஓக்கள் குமரன், ராதிகா, மேலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். கடந்த 2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரை சுமார் 944 வீடுகள் கட்டப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. ஊராட்சி செயலர்கள், இது போன்ற வீடுகளை நேரில் சென்று எதற்காக வீடு கட்டப்படவில்லை என்பதை ஆய்வு செய்து, அதனை கட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

 வீடு கட்டும் பணிகள் 100 சதவீதம் முழுவதுமாக நடைபெற வேண்டும். அனைத்து திட்ட பணிகள் செயல்படுத்த ஊராட்சி செயலர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஒன்றிய குழு தலைவர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: