உலக செவிலியர் தின விழா கொண்டாட்டம்

தர்மபுரி, மே 14: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில், சுவாமி விவேகானந்தா செவிலியர் கல்லூரியில், உலக செவிலியர் தின விழா நடந்தது. விழாவை நிர்வாக அறங்காவலர் வசந்தராணி, செயலாளர் டாக்டர்.நாகராஜன், கல்லூரியின் முதல்வர் உமாபதி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தனர். பேராசிரியை பிரிசி மோனிகா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பத்மாவதி செவிலியர் கல்லூரி முதல்வர் செல்வி, தர்மபுரி ஓம் சக்தி செவிலியர் கல்லூரி முதல்வர் நஜிரா, தர்மபுரி பாஸ்போ செவிலியர் கல்லூரி முதல்வர் அமுதா, தர்மபுரி அன்னை செவிலியர் கல்லூரி முதல்வர் லஷ்மிபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிலை 1 செவிலியர் கண்காணிப்பாளர் (ஓய்வு) சாந்தாமணி, கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். அவரது சேவையை பாராட்டி, சிறந்த செவிலியர் விருதை, நிர்வாக அறங்காவலர் வசந்தராணி மற்றும் செயலாளர் டாக்டர்.நாகராஜன் ஆகியோர் வழங்கினர். விழாவையொட்டி, நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், செவிலியர் செயல்முறை பயிற்சிகளில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. பேராசிரியை செல்வி நன்றி கூறினார்.        ...

Related Stories: