அரசலாறு மதகு அருகில் அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது

நன்னிலம், மே 14: நன்னிலம் அருகே அரசலாறு மதகு அருகில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்து டிப்பர், டிராக்டரை பறிமுதல் செய்தனர்.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள கடலங்குடி அரசலாறு மதகு அருகில், மணவாளநல்லூர் கீழத் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விக்கி (எ) விக்னேஷ் (23) என்பவர் தனக்குச் சொந்தமான டிராக்டர் மற்றும் டிப்பரைக் கொண்டு, மணல் அள்ளிக் கொண்டிருந்தார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரவாஞ்சேரி போலீசார் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் டிரைவரை கைது செய்து, டிப்பரையும், டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: