×

10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டு விழா எம்.பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருத்துறைப்பூண்டி, மே 14: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதியபேருந்து நிலையத்திலிருந்து வேதாரண்யம் சாலை வரை ஒரே சாலைதான். நகரில் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி திருவாரூர் சாலை வேளூர் பாலத்திலிருந்து நாகை பைபாஸ் சாலை வரை 2.460 கி.மீ. புறவழிச்சாலை அமைப்பதற்கு ரூ.7 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆயத்தப் பணி தொடங்கப்பட்டது. இதில் உள்ள நிலங்கள் அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும். நிலங்களுக்கான மதிப்பீடு தொகை நிர்ணயிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் பணி நின்று போய் நிதியும் திரும்பி போய்விட்டது. அதையடுத்து தமிழக அரசு புறவழிச்சாலை திட்டப் பணிகளுக்கு ரூ.22.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.விழாவில், நாகை எம்பி செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன்,மாரிமுத்து, ஆர்டிஓ அழகர்சாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...