கந்தர்வகோட்டை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

கந்தர்வகோட்டை, மே 14: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள ஆபத்சகாயர் உடனுறை அமராவதி அம்மன் ஆலயத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு அதி விமரிசையாக நடைபெற்றது.இதில் நந்தீஸ்வரருக்கு எண்ணெய்க்காப்பு செய்து திரவிய தூள், சந்தனம், விபூதி, பன்னீர், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்தூள் சொர்ணாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் இது போன்ற அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து நந்தீஸ்வரருக்கு புது வஸ்திரம் சாத்தி நெய்தீபம் காட்டி வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்று சென்றனர்.

Related Stories: