பொன்னமராவதி அருகே அரசு கல்லூரியில் அறிவியல் மனப்பான்மை கருத்தரங்கு

பொன்னமராவதி,மே 14: பொன்னமராவதி அருகே பூலான்குறிச்சி அரசு கல்லூரியில் அறிவியல் மனப்பான்மை கருத்தரங்கம் நடந்தது.பூலான்குறிச்சி அரசு கலைக்கல்லூரி முதுகலை வேதியியல் துறையின் பேரவை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முத்துசாமி தலைமை வகித்தார். வேதியியல் துறை தலைவர் ரமாதேவி முன்னிலை வகித்தார். முதுகலை வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவி ஷோபனா வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி நோக்கவுரையாற்றினார். மாவட்ட தலைவர் கோபிநாத் அறிவியலை படிப்பதோடு இல்லாமல் அறிவியல் மனப்பான்மையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மாவட்ட பொருளாளர் ரகுநாதன் அறிவியல் ஆய்வுகளை எவ்வாறு மேற்கொள்வது என்று பேசினார்.மாநில பொறுப்புசார் செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவியல் செயல்பாடுகளை செய்து காண்பித்து பேசினார். இளங்கலை வேதியியல் மாணவி விஜயசாந்தி நன்றி கூறினார். பல்வேறு துறை பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Related Stories: