×

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில்தானிய சேமிப்பு கிடங்கு கட்டுமான பணி அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை, மே 14: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப்பணிகளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சி கலெக்டர் கவிதா ராமு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எரிச்சி சிதம்பரவிடுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் முதலமைச்சரால் சட்டமன்ற 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 250 மெ.டன் கொள்ளளவு கொண்ட தானிய சேமிப்பு கிட்டங்கி கட்டுமான பணிகள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன.அதற்கான கட்டுமான பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரபுரம், எருக்கலக்கோட்டை நாகம்மாள் கோயில் கலையரங்கம் ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலும், ராஜேந்திரபுரத்தில் பயணியர் நிழற்குடை ரூ.6.5 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுமான பணிகள் அனைத்தும் விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Minister ,Meyyanathan ,Aranthangi Panchayat Union ,
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...