காரைக்கால் முத்துமாரி நாகத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால்,மே 14: காரைக்கால் முத்துமாரி நாகத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.காரைக்கால் நகர பகுதியில் உள்ள முத்துமாரி நாகத்தம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், கோயிலை புனரமைத்து மீண்டும் குடமுழுக்கு செய்ய அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாக பூஜை தொடங்கியது. நேற்று காலையுடன் இரண்டு கால யாக பூஜைகள் நிறைவு பெற்றது. பின்னர் கடங்கள் புறப்பாடாகி, காலை 10 மணியளவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: