புகளூர் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்திய கம்யூ. வலியுறுத்தல்

வேலாயுதம்பாளையம், மே 14: வேலாயுதம்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் ஏழாவது ஒன்றிய மாநாடு நடைபெற்றது.மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, சிபிஐ மாவட்ட செயலாளர் ரத்தினம், மாவட்ட துணைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.மாநாட்டில், மலைவீதி கந்தம்பாளையம் முதல் புகளூர் வரை சாலையில் சென்டர் மீடியன் அமைத்து மின் விளக்கு பொருத்த வேண்டும். புகழூர் நகராட்சி வள்ளுவர்நகர் தெற்கு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரை பாதாள சாக்கடை அமைத்து கொசுத்தொல்லையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்.

மலைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் நகராட்சி நிர்வாகம் வழிவகை செய்து கொடுக்க வேண்டும். தோட்டக்குறிச்சியிலிருந்து கந்தம்பாளையம் வரை நூற்றுக்கணக்கான ஆடுகள் ரோட்டில் குறுக்கும், நெடுக்குமாக மேய்ந்து கொண்டிருக்கிறது.இதனால் ஏராளமான விபத்துகள் நடந்து வருகின்றன. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: