திருவில்லிபுத்தூரில் ஒன்றிய அரசை கண்டித்து கூழ் காய்ச்சும் போராட்டம்

திருவில்லிபுத்தூர், மே 13: கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ககண்டித்து திருவில்லிபுத்தூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று விறகு அடுப்பில் கூழ் காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது.

கீழப்பட்டி தெருவில் நடந்த இந்த போராட்டத்திற்கு மாதர் சங்க கிளை தலைவர் முனீஸ்வரி தலைமை வகிக்க, சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ரவி கோரிக்கைகளை விளக்கி பேசினார். விறகு அடுப்பில் கூல் காய்ச்சுவது போல் காட்சிப்படுத்தியும், சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் வீரசதானந்தம், பிச்சைக்கனி, செயலாளர் சுகந்தி, பொருளாளர் தாமரைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: