புதுக்கோட்டை ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் துவக்கம்

சிவகாசி, மே 13: சிவகாசி அருகே புதுக்கோட்டை ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் துவக்க விழா நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் காளீஸ்வரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு குறுந்தொழில் முனைவோர் பயிற்சி திட்டத்தின் கீழ், எம்பிராய்டரி மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று துவங்கிய இப்பயிற்சி முகாம் 45 நாட்கள் நடக்கிறது. இதில் புதுக்கோட்டை மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முடிக்கும் பெண்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

Related Stories: