சிவகாசி யூனியனில் பயிற்சி முகாம்

சிவகாசி, மே 13: சிவகாசி யூனியன் அலுவலகத்தில் ஊராட்சி அமைப்புகள், சமூக நிறுவனங்களை ஒருங்கிணைப்பு செய்தல் பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமராஜ் தலைமை வகித்தனர். பயிற்சியாளர்கள் தமிழ்செல்வி, கவியரசி பயிற்சி அளித்தனர். ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், விவசாய உற்பத்தி குழுவினர் பங்கேற்றனர். ஊராட்சியை முன்னேற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அனைவருக்கும் பயிற்சி கையேடுகள், பேனா ஆகியவை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவியாளர் தர்மர் செய்திருந்தார்.

Related Stories: