தேனி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தேனி, மே 13: தேனி என்.எஸ் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.  விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்றார். கல்லூரி செயலாளர் காளிராஜ், இணை செயலாளர்கள் சுப்புராஜ், வன்னியராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் கலந்து கொண்டு 718 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும், பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பிடித்த 15 மாணவிகளுக்கும், இரண்டாம் இடம் பிடித்த 11 மாணவிகளுக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

Related Stories: