அரசு கல்லூரியில் முப்பெரும் விழா

திருவாடானை, மே 13: திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. திருவாடானையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் நுண்கலை மன்ற விழா, விளையாட்டு விழா, கல்லூரி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஆண்டு விழாவில் கல்லூரி முதல்வர் மாதவி தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் பழனியப்பன் வரவேற்றார். பரமக்குடி அரசு கலை கல்லூரி முதல்வர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடையே உரை நிகழ்த்தினார். பின்னர் கடந்தஆண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் ஆகியவைகள் நடைபெற்றன. இந்த முப்பெரும் விழாவில் பெரும்பாலான மாணவிகள் சேலை கட்டியும், மாணவர்கள் வேட்டி அணிந்து விழாவிற்கு வந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. விழாவின் முடிவில் ஆங்கிலத்துறை தலைவர் மணிமேகலை நன்றி கூறினார்.

Related Stories: