90 வயது மூதாட்டி மீட்பு

திருமங்கலம், மே 13: திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனில் கடந்த 10 நாள்களாக 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி செல்ல இடமின்றி ஆதரவின்றி தங்கியிருந்தார். இதனை கண்ட சமூக ஆா்வலர் ஒருவர் மூத்த குடிமக்கள் உதவி தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மூலமாக தகவல் அறிந்த திருமங்கலம் தாசில்தார் அனந்தகிருஷ்ணன், டவுன் விஏஓ பாலமுருகன், கள பொருப்பு அதிகாரி ஞானகுரு ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரயில்வே ஸ்டேசனில் மூதாட்டியை மீட்டனர்.அவரிடம் விசாரித்ததில் பெயர் ஜோதி (90) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மூதாட்டியை திருநகரிலுள்ள ஒரு காப்பகத்தில் அதிகாரிகள் சேர்த்துவிட்டு அவரது சென்னையில் உள்ள மகன் செல்வராஜிற்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனே வந்து அழைத்துசெல்வதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

Related Stories: