மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்களுக்கு இடஒதுக்கீடு: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை, மே 13: மதுரை மாநகராட்சி மன்றத்தில், அதிமுக உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘மதுரை மாநகராட்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு உரிய இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும். இந்த இருக்கை ஒதுக்கீடு குறித்து கவுன்சில் செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளேன். கூட்டுறவு சங்கங்களில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு உரிய அதிகாரம் கொடுக்க வேண்டும். முறையாக திட்டத்தை நிறைவேற்றினால், உலக வங்கியில் கடனுதவி பெறலாம். மதுரைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவித்த திட்டங்களை ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுத்திடவும் நடவடிக்கை வேண்டும்’’ என்றார்.

Related Stories: