பெரும்பாறை பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள் வனத்திற்குள் விரட்டியடிப்பு

பட்டிவீரன்பட்டி, மே 13: பெரும்பாறை,  தடியன்குடிசை, கானல்காடு, மங்களங்கொம்பு உள்ளிட்ட மலைத்தோட்டங்களில்  மலைவாழை, மிளகு, ஆரஞ்சு, காப்பி, சவ்சவ், அவரை போன்ற பயிர்களை விவசாயிகள்  பயிரிட்டுள்ளனர். கடந்த வாரம் முதல் 2 காட்டு யானைகள் இப்பகுதியில்  சோலார், முள் வேலிகளை உடைத்து மலைத்தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய  பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கே  செல்லவே அச்சப்பட்டு வந்தனர். மேலும் இதுபற்றி வனத்துறையினரிடம் புகார்  தெரிவித்தனர்.  இந்நிலையில் வத்தலக்குண்டு வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வனவர்  அய்யனார்செல்வம், வனகாப்பாளர் பீட்டர்ராஜா மற்றும் வேட்டைத் தடுப்பு  காவலர்கள், வனத்துறை பணியாளர்கள் இணைந்து நேற்று முன்தினம் இரவு 2  காட்டுயானைகளை வெடி வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Related Stories: