உடுமலை திருப்பதி கோயிலில் ஸ்ரீநரசிம்மர் ஜெயந்தி விழா

உடுமலை, மே 13: உடுமலை திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீநரசிம்மர் ஜெயந்தி விழாவையொட்டி, சிறப்பு ஹோமம் மற்றும் திருமஞ்சனம் நடக்கிறது. இன்று (13ம் தேதி) மாலை 5 மணிக்கு ஹோமம் ஆரம்பம். 6 மணிக்கு பூர்ணாஹூதி தொடர்ந்து பிரதோச பூஜை, நாளை காலை 10.30 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை 5 மணிக்கு ஹோமம், 6 மணிக்கு பூர்ணாஹூதி, 15ம் தேதி காலை 8 மணிக்கு பூர்ணாஹூதி, 9 மணிக்கு நவகலச சிறப்பு திருமஞ்சனமும் மாலையில் சத்தியநாராயணா பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீபாலாஜி சேரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Related Stories: