ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவன சார்பில் சிறப்பு வீட்டு கடன் முகாம்

திருப்பூர், மே 13: ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு வீட்டு கடன் முகாம் திருப்பூரில் நடந்தது. ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் திருப்பூர் கிளை மேலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து, கடன் அனுமதி கடிதங்களை வழங்கினார். வங்கி பணியாளர்கள் சத்தியராஜ், செந்தில்குமார், மணிகண்டன், பாரதிராஜா, யுவராஜ், தினேஷ்குமார் கந்தசாமி ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இம்முகாம் குறித்து திருப்பூர் கிளை மேலாளர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், ‘‘அனுமதிபெற்ற வீட்டு மனைகள் வாங்க, வீட்டு கட்டிட, வீடு மற்றும் அடுக்குமாடி கட்டடம் வாங்க, வீடு பழுது பார்க்க, வணிக வளாகம், திருமண மண்டபம், வர்த்தக கட்டிடம் கட்டிட மற்றும் பிற வங்கி, பிற நிதி நிறுவனத்தில் அதிக வட்டியில் நிலுவையில் உள்ள வீட்டு கடனை மாற்றிக் கொள்ள சிறப்பு முகாமில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும்,சம்பளதாரர்களுக்கு, விழாக்கால சலுகையாக ரெப்கோ பெஸ்டிவல் பைனான்ஸ் எனும் பெயரில் 7.15 சதவீத வட்டி விகிதம் முதல் கடன்கள் வழங்கப்படுகின்றன. சிறப்பு சலுகையாக 0.50 சதவிகிதம் மட்டும் செயல்முறை கட்டணம் மற்றும் நிர்வாக கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகின்றது. மேலும் விபரங்கள் அறிய 94443 94976, 0421 - 2239202, 99760 09400, 73731 10130 என்ற எண்களில் அழைக்கலாம்’’ என்றார்.

Related Stories: