அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

ஊட்டி, மே 13:ஊட்டி நகராட்சியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று ஊட்டி நகராட்சி அலுவலகம் முன் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்பி அர்ச்சுணன், முன்னாள் எம்எல்ஏ சாந்திராமு, முன்னாள் நகராட்சி தலைவர் சத்தியபாமா, துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், குன்னூர் நகராட்சி முன்னாள் தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, அதிமுகவினர் காலிக்குடங்களுடன் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் பொதுமக்கள் நகராட்சி வளாகத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Related Stories: