புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி, மே 13:  தூத்துக்குடியில் மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் கிருபைராஜ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன், மகளிரணி பொறுப்பாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் அதிக்குமார் குடும்பர் வரவேற்றார். கூட்டத்தில் திண்டுக்கல்லில் வரும் 16ம் தேதி நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு மாவட்டத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளர்கள் பெருமாள், புதூர்செல்வம், கடற்கரை, பெத்துராஜ், குருவை சதீஷ்குமார், பொன்அமிர்தம், மாநில மகளிரணி நிர்வாகிகள் பிரேமா, இந்திரா, ஒன்றிய செயலாளர்கள் செந்தூர்பாண்டியன், சண்முகநாதன், முருகன், மனோகரன், முருகேசன், உமையனன், பெருமாள், முருகேசன், சின்னத்துரை, ரவி, சக்கரவர்த்தி, பேச்சிமுத்து, கேசவன், ராஜா, ராஜா, இளைஞரணி அழகர்சாமி, தொகுதி செயலாளர் பெருமாள்,  மாநகர துணை செயலாளர் துரை, இளைஞரணி செயலாளர் மாரியப்பன், மீனவரணி செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாநகர செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Related Stories: